2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ள அனர்த்த ஒத்திகை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு,  பட்டாபுரம் கிராமத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும்போது எவ்வாறு அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது என்பது தொடர்பான வெள்ள அனர்த்த ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிகழ்ச்சி நிரலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவும் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தன.

பட்டாபுரம் கிராம சேவை உத்தியோகஸ்தர் தி.பிரபாகரனின்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் த.துஷ்யந்தன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியேகாகஸ்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவினர், கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்கள்,  பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தங்களின்போது மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுவது,  எவ்வாறான ஆவணங்;களை மக்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுதல் வேண்டும் உள்ளிட்டவை பற்றி விளக்கமளிக்கப்பட்டன.

மேலும், கிராம மட்டத்தில் இயங்குகின்ற அனர்த்த முன்னெச்சரிக்கைக் குழு, தேடுதலும் காப்பாற்றுதலுக்குமான குழு, முகாம் முகாமைத்துவக் குழு, முதலுதவியும் சுகாதாரத்திற்கும் பொறுப்பான குழு, விழிப்புடன் இருத்தலும் பாதுகாத்தலுக்குமான குழு ஆகிய குழுக்கள் வெள்ள அனர்த்த காலத்தில் எவ்வாறு செயற்படுதல் என்பது  தொடர்பில் ஒத்திகை  பார்த்தன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .