2025 மே 15, வியாழக்கிழமை

'எமது தனித்துவம், அடையாளத்தைக் காப்பது தமிழ்மொழி'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


எமது தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேணிக் காப்பது தாய்மொழியான தமிழ்மொழியென்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண தமிழ்மொழி தின பரிசளிப்பு விழா கல்லடி சிவானந்தா வித்தியாலய மண்டபத்தில் சனி;க்கிழமை (26) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினர்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ் பேசும் மக்களின் மொழி, கலாசார விழுமியங்களை கட்டிக்காப்பது தமிழ்மொழியே ஆகும். உலகில் 3,000 மொழிகள் உள்ளன. இருப்பினும்,  எழுத்து வடிவில் நூற்றுக்கும்  குறைவான மொழிகள் உள்ளன. இவற்றில் செவ்விய மொழிகளில் பழமை வாய்ந்ததும் புதுமொழியாக காணப்படுவதுடன், இன்றும் பேச்சு வழக்கிலுள்ள மொழி தமிழ்மொழி ஆகும்.

இன்று எமது சமுதாயத்தில் இவ்வாறான நிகழ்வுகளில் மாணவர்களின் திறமைகளை மாகாண, தேசிய மட்டங்களில் வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டுக்குரியதும் வரவேற்கத்தக்கதுமாகும். மொழி மனிதனின் ஒரு பலம்.  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாய்மொழியை மாணவர்கள் மறக்கக் கூடாது' என்றார்.

இவ்விழாவில்  தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முகம்மட் இஸ்மாயில், பேராசிரியர் கலாநிதி ஏ.சண்முகதாஸ், பேராசிரியை  மனோமனி சண்முகதாஸ்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டுவரை தேசியமட்ட தமிழ் தின போட்டியில் சாதனை படைத்த கிழக்கு மாகாண வலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு தமிழ் தின போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணமட்ட தமிழ் தின போட்டியில் வெற்றியீட்டிய 550 மாணவர்களுக்கு பதக்கங்களும் வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .