2025 மே 15, வியாழக்கிழமை

ஏறாவூர்பற்றில் நடமாடும் சேவை

Super User   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

நிறைவான இல்லம் வளமான தாயகம்  கிராமம் கிராமமாக வீடு வீடாக தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2014 மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டம் எனும் தொணிப்பொருளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வழிகாட்டலின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் வெள்ளிக்கிழமை (25) ஈரளக்குள அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நடமாடும்சேவையினூடாக பிறப்பு சான்றிதழ்கள், இறப்பு சான்றிதழ்கள் திருமணப்பதிவு மற்றும் தேசிய அடையாளட்டை போன்ற பதிவுகள் ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்துடன் காலம் கடந்த திருமணப்பதிவுகளும் உடன்பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களின் சேவையை வழங்கியிருந்தனர்.

அத்துடன் சமூகசேவை திணைக்களம் காணி அபிவிருத்தி திணைக்களம் சுகாதார திணைக்களம் சிறுகைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம் கால்நடை திணைக்களம் கமநல திணைக்களம் பெண்கள் சிறுவர் அபிவிருத்தி திணைக்களங்கள் போன்ற திணைக்களங்களும் சேவைகளை வழங்கினர்.

மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் யானைகளிடமிருந்து மக்களை பாதுகாத்து கொள்வதற்காக யானைவெடிகளையும் வழங்கினர்.  நடமாடும்சேவை ஊடாக ஈரளக்குள கிராம சேவகர் பிரிவிலுள்ள பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு அவர்களின் தேவைகளை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவு இரா.நெடும்செழியன் ஆகியோரினால் காலம்கடந்த திருமணப்பதிவுகள் மற்றும்  காணி உறுதிப்பத்திரங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .