2025 மே 15, வியாழக்கிழமை

இந்து இளைஞர் பேரவையின் ஆட்சிக்குழு கூட்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஆட்சிக்குழு கூட்டம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை (26) நடைபெற்றது.

இவ் ஆட்சிக்குழு கூட்டத்தின் போது செயற்பாட்டு அறிக்கை, திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பூசையின் கணக்கறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டன.

அத்தோடு ஆலய தர்மகர்த்தாக்களுக்கு ஆன்மீக கருத்தரங்கு நடாத்தல், சுவாமி தந்திரதேவா மகராஜ் நிகழ்வு, இந்து இளைஞர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு நடாத்தல், பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான இந்து சமய ஆன்மீக கருத்தரங்கு நடாத்தல், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆன்மீக கருத்தரங்கு நடத்தல், பெற்றோரை இழந்த, வறிய மாணவர்களுக்கு கல்வி மேன்பாட்டுக்கு உதவுதல், வறிய, பெற்றோரை இழந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கு கல்விக்கு உதவி வழங்குவது, கணவனை இழந்த பெண் குடும்பத் தலைமை வகிக்கும் குடும்பங்கள் அவர்களது வாழ்வாதார சுயதொழில் செயற்பாட்டுக்கு உதவுவது, விசேட தேவைக்குரியவர்களாக உள்ளவர்களின் வாழ்வாதார சுயதொழில் செயற்பாட்டுக்கு உதவுவது, கௌரவிப்பு, பரிசளிப்பு விழா நடத்தல், குருமார்களுக்கான கருத்தரங்கு நடாத்தல், அபரக்கிரியை பயிற்சி, மங்கள மேளப் பயிற்சி, பூசகர்களுக்கான பயிற்சி நடாத்தல், இந்துக்களின் மதமாற்றச் செயற்பாடு போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தின் போது பேரவை செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் ந.புவனசுந்தரம் உட்பட அதன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்திலுள்ள இந்து அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பல திட்டங்கள் பற்றி கலந்துரையாடினர்.

இக்கூட்டத்தின் போது அன்றை தினம் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனின் 44ஆது பிறந்த தினத்தையொட்டி குருக்கள் மடம் கிருஸ்ணன் ஆலயத்தினரால் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .