2025 மே 15, வியாழக்கிழமை

யூரியா பை தொழிற்சாலையால் கேடு விளையும்: எஸ்.யோகேஸ்வரன்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வாழைச்சேனை - நாசிவன்தீவுக் கிராமத்தில் செயற்படவிருக்கும் யூரியா பை தயாரிப்புத் தொழிற்சாலையானது அந்தப் பகுதியைச் சூழவுள்ள வாவிக்கும் கிராம மக்களின் வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி மன்மதராஜாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கோறளைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள நாசிவன்தீவுக் கிராமத்தில் ஒரு நபர் தனது காணியில் யூரியா பை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகின்றார்.

இத்தொழிற்சாலை செயற்படத் துவங்கும்பட்சத்தில் நாசிவந்தீவு கிராம மக்களுக்கும் அதனைச் சூழவுள்ள வாவிக்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மக்களது வாழ்வையும் கலாசாரத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கச் செய்யும் எந்தவொரு விடயத்தையும் எவரும் அனுமதிக்கக் கூடாது.

எனவே இத்தொழிற்சாலை நிறுவுவதையிட்டு அப்பகுதி மக்களுடன் கலந்தாலோசித்து பரிசீலனை செய்து குறித்த விடயம் அப்பகுதிச் சூழலுக்கும் மக்களின் வாழிவியலுக்கும் பங்கம் ஏற்படுத்துமாக இருந்தால் இந்தத் தொழிற்சாலை தாபிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்' என்று யோகேஸ்வரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதேச செயலாளர், பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர், பிரதேச சபத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .