2025 மே 15, வியாழக்கிழமை

கோவிலுக்கு நிதி சேகரித்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சனீஸ்வரன் கோவிலுக்கு ஆதார நிதி சேகரிப்பதான பற்றுச்சீட்டைக் காட்டி பொதுமக்களிடம் போலியாக  நிதி சேகரித்துக்கொண்டிருந்த ஒருவரை  களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) கைதுசெய்ததாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சந்தேக நபரிடமிருந்து போலி இரும்புத் துப்பாக்கியொன்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். 

ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த பொன்னையா கோணேஸ்வரன் (வயது 52) என்ற இச்சந்தேக நபர்  முன்னர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக இருந்ததாகவும்   தற்போது கோவில்களில் அறப்பணி  செய்வதாகவும் பொதுமக்களிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் சந்தேகமடைந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .