2025 மே 15, வியாழக்கிழமை

வாசிப்பு நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


போரினால் பாதிக்கப்பட்ட ஆயித்தியமலை பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் 8 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாசிப்பு நிலையத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை திங்கட்கிழமை (28) திறந்துவைத்தார்.

வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட உத்தியோகஸ்தர் ஜெகன் இராஜரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை எப்.எக்ஸ்.டயஸ், ஆயித்தியமலை பங்குத்தந்தை டக்ளஸ் ஜெம்ஸ் மற்றும் வவுணதீவு அபிவிருத்தி நிறுவன அதிகாரிகளான இ.செந்தில்நாதன், ஜே.ஆர்.ஜெயராஜகுமாரன், வி.கிருஸ்ணமூர்த்தி மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .