2025 மே 15, வியாழக்கிழமை

பசுமரத்தாவரங்களால் மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்த நடவடிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்
, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரைப் பசுமையாக வைத்திருக்கும் திட்டத்தை மட்டக்களப்பு மாநகரசபை ஆரம்பித்துள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இதற்கமைவாக, மட்டக்களப்பு நகர முகப்பு நுழைவாயிலின் மணிக்கூட்டுக் கோபுரத்தை அண்டிய பகுதிகளில் பசுமரங்களை நாட்டும் வேலைத் திட்டம் திங்கட்கிழமை (28) மாநகர ஆணையாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக அழகு தரும் 200 பசுமைத் தாவரங்கள் இதன்போது நடப்பட்டன. இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பின் முக்கிய வீதி மருங்குகளிலும் வீதியின் மத்தியிலும் நிழல்தரும் பசுமரங்கள் நடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்டுள்ள மட்டக்களப்பு நகரை பசுமரத் தாவரங்களால் அழகுபடுத்தி பராமரிப்பதே மாநகர சபையின் நோக்கம் என்று மாநகர ஆணையாளர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .