2025 மே 15, வியாழக்கிழமை

பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
,ரி.ஜவ்பர்கான்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் வெளிவாரி மற்றும் உள்வாரி பட்டதாரிகள் செவ்வாய்க்கிழமை(30) மாவட்டச் செயலகம் முன் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களைப் போன்று 2011 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள் வேலையில் உள்வாங்கப்பட்டு 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில் தமக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்றுகூறி வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இம்முறையீட்டுக்கமைவாக செவ்வாய்க்கிழமை (29) நேர்முகப்பரீட்சைக்கு மாவட்டச் செயலகத்திற்கு வருமாறு ஒவ்வொரு பட்டதாரிக்கும் உதவி மாவட்டச் செயலாளரினால் கையொப்பமிட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேர்முகப்பரீட்சைக்கு கச்சேரிக்கு வந்தபோது விளம்பரப்பலகையில் நேர்முகத்  தேர்வுக்கான திகதி பொது நிர்வாக உளநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து 186 பட்டதாரிகளும் மாவட்டச் செயலகம் முன் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பட்டதாரிகள் சங்கத் தலைவர் உ.உதயகாந் தெரிவித்தார்.

வேலை கிடைக்கும் வரையில் தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .