2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் சிறுவர் நடமாடும் சேவை

Super User   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் கிராமமட்ட சிறுவர் நடமாடும் சேவை திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் மு.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
 
இதன்போது பாடசாலை இடைவிலகலை தடுக்கவும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாகவும், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் மு.தனபாலசுந்தரத்தின் வழிகாட்டலின் கீழ் கிராம மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்பு குழுக்களால் பிரதேசத்திலுள்ள அனைத்து கிராமங்கள் தோறும் இச்சேவை இடம்பெற்று வருகின்றது. 
 
இப்பிரதேசத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 62 இடைவிலகல் மாணவர்களில் 22 பேர் மீண்டும் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் தொழிற் பயிற்சிகளுக்கு அனுப்புவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நடமாடும் சேவை இவ்வாரமும் தொடரும் என கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் மு.தனபாலசுந்தரம் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .