2025 மே 15, வியாழக்கிழமை

அரியநேத்திரனின் உரைக்கு மறுப்பு

Super User   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளின் பணம் எந்த ஒரு அமைச்சருக்கும் வழங்கப்படவோ, அதற்கான நடடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றஉறுப்பினர் பா.அரியநேத்திரன் கரையாக்கந்தீவு ஆலய முன்றலில் இடம்பெற்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது உரையாற்றியமை தொடர்பிலான செய்தி சனிக்கிழமை (26) வெளியாகியிருந்தது.

இச் செய்தி குறித்து விளக்கமளிக்கையிலேயே பிரதிப்பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளின் பணத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பணம் மக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளன. மிகுதிப்பணம் அரச வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

இவற்றிலிருந்து அமைச்சர்களுக்கு எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை என்பதுடன், அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மக்களின் வைப்புகளிலுள்ள பணம் சமுர்த்தி வங்கிகளிலும், அரச வங்கிகளிலுமே வைப்பிலிடப்பட்டுள்ளன.

சுயதொழில் ஊக்குவிப்புகள், தொழில்களுக்காக மக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ள பணம் தவிர மிகுதிப்பணம் அரச வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளபோதும் அவற்றினையும் கடனாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே நாடாளுமன்றஉறுப்பினர் கூறியிருப்பது போன்று எந்த அமைச்சருக்கும் பணம் கொடுக்கப்படவும் இல்லை. அதற்கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை என்றும் பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .