2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறைகளை சீர்செய்வதில் தடை

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தின் வாகரை பிரNதுசத்திலுள்ள ஆசிரியப் பற்றாக்குறைகளை சீர்செய்வதில் சில அரசியல்வாதிகளும் இலங்கை ஆசிரியர் சங்கமும் தடையாக இருப்பதாக கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீ கிருஷ்;ணராஜா செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுத்தம் மற்றும் சுனாமி போன்ற கடந்த கால அனர்த்தங்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதும் பின்தங்கியதுமான கல்குடா கல்வி வலயத்தின் வாகரை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் ஆசிரியப் பற்றாக்குறைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் சில அரசியல்வாதிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் தடையாக இருந்து வருகிறது.
வாகரைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 15 வரையான ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள், கணிதப் பாடத்துக்கு 3 ஆசிரியர்கள், விஞ்ஞானப் பாடத்திற்கு 3  பேர், ஆங்கிலத்திற்கு 8 பேர் என பற்றாக்குறையாக உள்ளனர்.

இதற்கென ஆசிரியர்களை ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று பிரதேசங்களிலிருந்து இடமாற்றம் செய்யும்போது அதிகமான ஆசிரியர்கள் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவர்களை வாகரைப்பிரதேசப் பாடசாலைகளுக்கு அனுப்புவதில் ஒரு சில அரசியல்வாதிகளும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும்; துணைபோகிறது.

இது கல்குடா கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தியில் எதிர்காலத்தில் பாரிய கல்வித்தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாகாணக் கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தில் மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்களுக்கு 19 ஆசிரியர்கள் கல்குடா வலயத்திலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். இவர்கள் எமது வலயத்தில் அதிக காலம் பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

இதேவேளை எமது வலயத்திற்கு ஆரம்பப்பிரிவுக்கு 15 ஆசிரியர்களும், ஆங்கிலப்பாடத்திற்கென 47 ஆசிரியர்களும், கணிதப்பாடத்திற்கென 4 பேரும் விஞ்ஞாப்பாடத்திற்கு 2 பேரும் தேவையாக உள்ளது என்றும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X