2025 மே 15, வியாழக்கிழமை

கிராமத்திற்குள் புகுந்த முதலை

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரசேத்திலுள்ள ஒள்ளிக்குளம் மதுராபுரம் கிராமத்தில் புதன்கிழமை(30) அதிகாலை 8அடி நீளமான முதலை ஒன்று புகுந்துள்ளது.

குறித்த முதலையானது கிராமத்திலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் அதிகாலை ஒரு மணியளவில் புகுந்தாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதைக்கண்ட கிராம வாசிகள் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்த்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இம்முதலையானது ஒள்ளிக்குளத்தலிருந்து கிராமத்திற்குள் புகுந்திருக்கலாமென கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .