2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கிலுள்ள ஹோட்டல்களை இ-தரப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கையில் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவுசாலைகளை இலத்திரனியல் ஊடாக நவீன தொழிநுட்பங்களுடன் தரப்படுத்த ஆசிய மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்துக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை பிரிவு மற்றும் திருகோணமலை நகரசபை பிரிவு ஆகிய பகுதிகளில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அறிவூட்டும் மூன்று நாள் பயிற்சி செயலமர்வொன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் திங்கட்கிழமை (28) மாலை ஆரம்பமானது.

இதன் ஆரம்ப வைபவத்தில் ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபுகுமார் தம்பி, கிழக்கு மாகாண விவசாய சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன், ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளான ஏ.வலீத், எம்.ஐ.எஸ்.றிசாட், சார்ள்ஸ் சசிகரன் உட்பட மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை, கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பிராந்திய சுகாதார வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த வேலைத்திட்டத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ள சிறிய மடிகணினிகள், ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபுகுமார் தம்பியினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரனிடம்  கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X