2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நாணய கண்காட்சி

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மண்டபத்தில் பேராசிரியர் எஸ்.எஸ்.அந்தோணிசாமி ஆசிரியரின் 718ஆவது  நாணய கண்காட்சி  செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றது.

இக்கண்காட்சியில் உலக நாடுகளின் 247 நாடுகளினது நாணய குற்றிகள் மற்றும் நாணய தாள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
இலங்கையில் 1870 தொடக்கம்  2014 வரை  பயன் படுத்திய, தற்போது பயன்படுத்தப்படுகின்ற நாணய குற்றிகளும், நாணய தாள்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந் நாணய கண்காட்சிகள் வட கிழக்கு, மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ  ஆகிய மாகாணங்களில் 718 பிரபல்ய பாடசாலைகளில்  தனது நாணய கண்காட்சிகளை நடத்தி கல்விமான்களினதும் , அறிஞர்களினதும் பாராட்டுகளையும் , நன்மதிப்பையும் பெற்றுள்ளார் .

நாணய கண்காட்சியானது பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையப் பெற்றுள்ளது. உலக 257 நாடுகளில்  250 நாடுகள் மட்டுமே  தற்போது நாணய புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X