2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குப்பைமேட்டில் பரவிய தீ கட்டுப்பாட்டினுள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள  குப்பைமேட்டில் கடந்த 02 நாட்களாக எரிந்துகொண்டிருந்த தீயை காத்தான்குடி நகரசபை ஊழியர்கள் புதன்கிழமை (30) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இக்குப்பை மேட்டில் காத்தான்குடி நகரசபை குப்பைகளைக் கொட்டிவந்தன. இவ்வாறு கொட்டப்பட்ட குப்பைகளில் தீ பரவிய நிலையில்,  காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாட் எடுத்த நடவடிக்கையால், தீ  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, இக்குப்பைமேட்டில் குப்பைகளை கொட்டப்படுவதைக் கண்டித்து இப்பகுதி மக்கள் புதன்கிழமை (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுப்புறச் சூழல் மாசடைகிறது. 

தற்போது  குப்பைகள் எரிந்த சாம்பல் இப்பகுதியிலுள்ள  பாடசாலை, பள்ளிவாசல், வீடுகள் ஆகியவற்றினுள் செல்வதாகவும்  இதனால்,  நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இங்கு குப்பைகள் கொட்டுவதற்கு  அனுமதிக்க மாட்டோமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாட், இங்கு குப்பைகள் கொட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோமெனவும் கூறினார். 

இதன்போது, குறித்த இடத்திற்கு வந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X