2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாகரை சூழலியல் பூங்கா திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன், க.ருத்திரன்


'பங்குபற்றலுடன் நீடித்து நிலைக்கக்கூடிய கரையோர வலய மீளமைப்பு திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை சூழலியல் பூங்காவை வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி செவ்வாய்க்கிழமை (29) திறந்துவைத்தார்.

வாகரை வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திறந்துவைக்கப்பட்ட இப்பூங்கா, வாகரை வடக்கு கண்டலடி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இப்பூங்கா மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையிலான அரியவகைத் தாவரங்கள் மற்றும்   விஞ்ஞான ரீதியான தாவரங்களை கொண்டமையும்.  மேலும், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடமாகவும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான இடமாகவும் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகவும் வாகரை பிரதேச உற்பத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளும் இடமாகவும் இப்பூங்கா அமையவுள்ளது.

விசேட முகாமைத்துவ திட்டத்தில் இச்சூழலியல் பூங்கா சுற்றாடல் ரீதியான அபிவிருத்திகளை  மேம்மடுத்த ஏதுவாக அமையும்.
இத்திறப்பு விழாவில் வெட்டப்படும் ரிப்பன் நாடாவிற்கு பதிலாக வாழை நாரும் பேப்பர் பிளேட்டுக்கு  பதிலாக தேக்கம் இலைகளும் பயன்படுத்தப்பட்டன.

திறப்பு விழாவில் கரையோர வலய மீளமைப்பு திட்டத்தின் திட்ட ஆலோசகர் கபில குணவர்த்தன,  கரையோர மூல வளங்கள் திணைக்கள திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், உதவி மாவட்ட வனவள அதிகாரி.ஏ.டி.நபிஸ்,  உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.நவிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X