2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முழு நேர ஊடகவியலாளர் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

Super User   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல

மட்டக்களப்பு மாவட்ட முழு நேர ஊடகவியலாளர் ஒன்றியம் புதன்கிழமை (30) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தில் இருந்து முழு நேரமாக ஊடகத்துறையில் பணியாற்றும் தமிழ், முஸ்லிம், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இவ்வமைப்பிற்கென நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

தலைவராக எஸ்.வரதராஜன், செயலாளராக ஏ.எச்.ஏ.ஹுசைன், பொருளாளராக கு.காந்தராஜ், உப தலைவர்களாக சிவம் பாக்கியநாதன், பளுலுல்லா பர்ஹான், உப செயலாளராக ஏ.கங்காதரன் தெரிவு செய்யப்பட்டதோடு செயற்குழு உறுப்பினர்களாக மேலும் ஐந்து பேர்; தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்படி அமைப்பின் புதிய தலைவர் எஸ்.வரதராஜன இதன்போது கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் பல்வேறு பட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் முழு நேரமாக ஊடகத்துறையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு கடமை புரியும் ஊடகவியலாளர்களுக்கென ஒரு தனியான அமைப்பு தேவை என்பதனை உணர்ந்து தற்போது இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வமைப்பினை அனைத்து ஊடகவியலாளர்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டு திறம்பட மேற்கொண்டு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.




  Comments - 0

  • ravi Thursday, 01 May 2014 12:02 AM

    நல்ல முயற்சி இது தொடர வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X