2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போட்டோப்பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

Super User   / 2014 மே 01 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு புதுக்குடியிருடிப்பில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரிக்கு  லண்டனில் இருந்து வருகை தந்த கல்முனையைச் சேர்ந்த சோமசுந்தரம் சதா, செவ்வாய்க் கிழமை (29) சென்று அங்கு நடைபெறும் சகல செயற்பாடுகளையும், அதன் நிலைமையினையும் நேரில் கேட்டறிந்து கல்லூரிக்கு தேவையாக இருந்த போட்டோப்பிரதி இயந்திரத்தினை  புதன்கிழமை (30) வழங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு தேவையான கைநூல்களை பிரதியெடுத்து வழங்குவதால் பயிற்சி நடவடிக்கைகள் இலகுவாக்கப்படும் என்பதோடு, அலுவலக தேவையும் பூர்த்தியாகும் என்பதால் ஒரு போட்டோப் பிரதி இயந்திரம் தேவையாக உள்ளதென்று கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வியந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில்; முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றும் இவர் இப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தன்னாலான உதவிகளைச் அவ்வப்போது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போன்ற பல நல் உள்ளங்களின் ஆதரவாலும், உதவியினாலுமே இக் கல்லூரியினை நடத்தக்கூடியதாக உள்ளதாகவும், புலம்பெயர் மக்களின் ஆதரவு உள்ளவரை இன்னும் சிறப்பான நிலைக்கு இக் கல்லூரியினை கொண்டு வர முடியும் என்றும் இக்கல்லூரியின் பணிப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X