2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட நான்கு மாணவர் கைது

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தத் தடையையும் மீறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசித்தமை, சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டங்களைக் கூட்டியமை என்கின்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நால்வரை நேற்று (03) கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புவிகுமார், மணிவண்ணன், திருக்குமரன், கோமகன் ஆகிய நால்வரும் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஹிரான் செனவிரட்ண தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளே இச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

புவிகுமார் என்பவர் முன்னதாக நேற்று மாலை மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும் அவர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து ஏனையவர்களும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மணிவண்ணன் - கலைப்பீடத்தைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு மாணவனாவார். ஏனையோர்களான முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த புவிக்குமார், வர்த்தக பீடத்தைச் சேர்ந்த  திருக்குமரன், விவசாய பீடத்தைச் சேர்ந்த கோமகன் ஆகியோர் இறுதியாண்டு மாணவர்களாவர்.

பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X