2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சிறந்த மனித தர்மத்தை மதங்கள் போதிக்கின்றன'

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த நாட்டில் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையிலிருந்த அந்நியோன்யமான உறவு சீர் குலைந்தது அரசியலால்தான் என மட்டக்களப்பு வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தெரிவித்தார்.

இந்து மற்றும் பௌத்த அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஒன்று கூடலொன்று மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை(03) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பௌத்தர்களின் சமய வழிபாட்டிற்கும் இந்துக்களின் சமய வழிபாட்டுகளுக்குமிடையில் பல்வேறு தொடர்புகள் இருக்கின்றன. போதை வஸ்த்து பாவிக்க கூடாது எனவும், கொள்ளையிடக் கூடாது எனவும், கொலை, மற்றும் பொய் சொல்லக் கூடாது இவை பாவமான காரியங்கள் எனவும் இவற்றை செய்யக் கூடாது எனவும் இந்து மதம் போதிக்கின்றது. இதைத்தான் பௌத்த மதமும் போதிக்கின்றது.

இந்து மதத்தில் சரணம் என்று சொல்கின்றோம். அதேபோன்று பௌத்த மதத்தில் புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்வதை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் உண்டு.

சிறந்த மனித தர்மத்தை மதங்கள் போதிக்கின்றன. நேர்வழியையும் சமாதனத்தையும் மதங்கள் வழிகாட்டுகின்றன.

அந்த நாட்களில் ஏறாவூரில் பௌத்தர்களும் இந்துக்களும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கிடையில் நெருக்கமான அந்நியோன்ய உறவு இருந்தது. இன்று அந்த உறவு இல்லை. இதற்கு காரணம் அரசியலாகும். அரசியல் தேநீர் சாயத்தை போன்றது. ஆத்மீகம் சோறு சாப்பிடுவதை போன்றதாகும்.

நம்மிடையே ஆத்மீக சிந்தனையும் இறைபக்தியும் வரவேண்டும். இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் நிரந்தர சமாதானமும் மலர்வதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டி வளர்க்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X