2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐக்கிய நட்புறவு நிகழ்வு

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.எல்ஜவ்பர்கான்


பிரதமரும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான டி.எம்.ஜெயரட்ணவின் வழிகாட்டலில் சமய விவாகார அமைச்சினால் மட்டக்களப்பில் பௌத்த-இந்து இன ஐக்கிய நட்புறவு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(04) மட்டக்களப்பு நாவற்குடா, இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பொலநறுவை மாவட்டத்தைச்சேர்ந்த 40 பௌத்த மாணவர்களுக்கும்  மட்டக்களப்பு மாவட்டத்ததைச்சேர்ந்த 60 இந்து மாணவர்களுக்கும்  பௌத்த இந்து மதங்களினூடாக இன ஐக்கியம் தொடர்பில் கற்பிக்கப்பட்டது.

இந்து மக்களின் பாரம்பரிய உணவுகள் பௌத்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் இந்து மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவி பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன், சமய விவகரா அமைச்சு ஆலோசகர் திருமதி எச்.எம்.குமாரி, விஸ்வ பிரம்மஸ்ரீ சி.வை..காந்தன் குருக்கள், இந்து பௌத்த மாணவர்களின் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X