2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இரயிலில் மோதி யானைகள் பலி

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன், எம்.எம்.அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு புனானை – மயிலந்தன்னை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (5) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இரண்டு ஆண் யானைகள் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த இரவு நேர 'மீனகயா' கடுகதி புகையிரதம் புனானை புகையிரத நிலையத்தை அடைவதற்கு இரண்டு கிலோ மீற்றர் தூரம் இருக்கையிலயே அதிகாலை 03.50 மணியளவில் இரண்டு யானைகளும் புகையிரதத்தில் மோதுன்டு உயிர் இழந்துள்ளன.

இவ் இரண்டு யானைகளும் 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டதாக இருக்கலாமென வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய சுற்றுவட்ட உதவியாளர் பி.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். இவற்றின் உயரம் ஏழு அடி என்றும்  அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X