2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொக்கட்டிச்சோலையில் தனியார் பஸ் தரிப்பு நிலையம்

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் புதிதாக  பிரதான  தனியார் பஸ் தரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.

இதற்காக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அமைச்சு 04 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதுடன்,  பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதற்கான  காணியை பட்டிப்பளை பிரதேச செயலகம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொக்கட்டிச்சோலையில் இதுவரைகாலமும்  தனியார் பஸ் தரிப்பு நிலையம் இல்லாதிருந்தது. இந்நிலையில், இங்கு முதன்முதலாக  தனியார் பஸ் தரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன்  நிர்மாணப்பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மண்முனைப்பாலம் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திறக்கப்பட்டதையடுத்து, கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் கொழும்புக்கு தனியார் பஸ் வண்டிகளும்  இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்  வண்டிகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • Ganesh Tuesday, 06 May 2014 07:28 PM

    தம்பி வெகு விரைவில மாட்ட போறார் எண்டுதான் சொல்லினம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X