2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தையல் பயிற்சித் திட்டம்

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'இடம்பெயர்ந்த பெண்கள் தீர்மானம் எடுத்தலிலும் பொருளாதார வலுவூட்டலிலும் பங்குபற்றுதலுக்கு ஏற்ற சூழலுக்கு சக்தியளித்தல்' எனும் திட்டத்தின் கீழ், ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள விதாதாவள நிலையத்தில் தையல் பயிற்சித் திட்டம் திங்கட்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனமானது இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் உதவியுடன் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த யுத்தத்தினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள பெண்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தும்  சுயதொழில் பயிற்சிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 02 மாதங்களைக் கொண்ட இத்தைய்யல் பயிற்சியில் யுத்தத்தினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, வவுணதீவு, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தங்கியுள்ள 25 பெண்கள் கலந்துகொண்டுள்ளதாக சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X