2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கணிதம், விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர பிரிவுக்கான பாட அழகுகளான கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவு திங்கட்கிழமை (5) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்பிப்பு நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சசீந்திர சிவகுமார், தமிழ்ப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ரீ.யுவராஜன், ஏறாவூர்ப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பாடசாலை 1ஏபி பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X