2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த முகாமைத்துவக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 மே 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது.

இதன்போது 45,000 ரூபா பெறுமதியான பாதுகாப்பு அங்கிகள், லைற், கையக ஒலிபெருக்கி உள்ளிட்ட  அனர்த்த பாதுகாப்புக்குத் தேவையான உபகரணங்களை  போரதீவுப்பற்று பிரதேசத்திற்காக  அப்பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்திடம் அக்ரெட் நிறுவனம்; வழங்கியது.

அக்ரெட் எனும் அரசசார்பற்ற அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்ரெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தாயுல் பாலாஹ், திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X