2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

Suganthini Ratnam   / 2014 மே 07 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகரசபையினுடைய சுகாதாரத் தொழிலாளர்களின் தேக ஆரோக்கியத்தை பரிசோதிக்கும் மருத்துவ முகாம் மட்டக்களப்பு நகர மண்டத்தில் புதன்கிழமை (07) நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில், சுமார் 100 சுகாதாரத் தொழிலாளர்களுக்கு மருத்துவப்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களான வைத்தியக் கலாநிதி ஆரணி, கௌரிபாலன், ஏ.எம்.பூகீம் ஆகியோர் இவர்களுக்கான மருத்துவப்  பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

சுகாதாரத் தொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலை நேர்த்தியாக செய்வதற்கான உடல் நிலையைக் கொண்டுள்ளனரா என்பதையிட்டு  இம்மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X