2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அலுவலக அறையை மாற்றினார் ஆணையாளர்

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பொதுமக்களின் நலன் கருதி மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம். உதயகுமார் தனது அலுவலக அறையை மாநகர வரவேற்பறைக்கு மாற்றிக்கொண்டுள்ளார்.

இந்த வகையில் புதன்கிழமை (07)  மாநகர சபை ஆணையாளர் மாநகர சபையின் முன்னாலுள்ள வரவேற்பறை பகுதியில் அமர்ந்து பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளரின் அறை மாநகர சபை மேல் மாடியில் அமைந்துள்ளது. இங்கு வருகை தரும் பொதுமக்கள் மாநகர ஆணையாளரை சந்திக்க வேண்டுமாயின் மேல் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பொது மக்கள் சிரமங்களை எதிர் கொண்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தனது அறையை புதன்கிழமைகளில் வரவேற்பறைக்கு மாற்றியுள்ளார்.

கடந்த புதன்கிழமையும் (30) ஆணையாளர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X