2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இணைந்த வடகிழக்குதான் எமது எதிர்பார்ப்பு

Kanagaraj   / 2014 மே 07 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,தேவ அச்சுதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்த வரையில் இணைந்த வடகிழக்கிலேதான் பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்றது அந்த வகையில் சிறு சிறு தவறுகளை நாம் மறந்து விடக் கூடாது. எமது மக்களை ஒன்றிணைத்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு என்ற வேறுபாடுகள் பற்றி கருணா, பிள்ளையான் போன்றோர்களால்தான் பேசப்படுகின்றது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கைப் பிரித்துப் பார்கின்றது என்ற செய்தியினையும் கருணா, பிள்ளையான் போன்றோர்கள்தான் கூறுகின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 28 ஆவது நினைவு தினம் நேற்று செவ்வாய் கிழமை(06) மாலை மட்டக்களப்பு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்;

ஒற்றுமையின்மையே எமது பலவீனம்

கடந்த போராட்ட காலத்தில் பல போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும். நாங்கள் பார்வையாளர்களாக இருக்கவில்லை நாங்கள் வகைப்படுத்தி மக்களைக் காப்பாற்றினோம். கடந்த காலத்திலிருந்து இன்றுவரை நாங்கள் ஒற்றுமையினை நேசித்து வருகின்றோம்.
 
நாங்கள் கடந்த காலத்திலிருந்து போராடி வந்தவர்கள் எமது மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்கள் ஒற்றுமையுடன் செற்படுவோம் என அடிக்கடி தெரிவித்து வந்தவர். ஆனால் நம்மவர்களிடத்தில் ஒற்றுமையின்மையானால் எமது சமூகம் எந்தளவிற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதனை நாம் காணக் கூடியதாக உள்ளது.

கூட்டமைப்பினை உருவாக்குவதில் ரெலோவின் பங்கு அளப்பரியது

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்குவதில் எது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கட்சியின் பங்களிப்பானது மிகப் பெரிதானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்குவதங்கு பதிரிகையாளர்களும் அவர்களது முழு ஆதரவை வழங்கினார்கள் இவற்றுக்கான ஆரம்ப வித்தாக செயற்பட்டவர்கள்தான் மறைந்த மூத்த பதிரிகையாளர்களான சிவராம், மற்றும் நடேசன். மற்று வெளிநாட்டிலே வசிக்கின்ற தவராசா, ஜெயானந்தமூர்த்;தி போன்றவர்கள். இவ்வாறு பல சிக்கல்களுக்கும் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் எமது மக்களின் தூர நோக்கு சிந்தனைகளோடு செயற்பட வேண்டும். அற்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலை பற்றித்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவுடன் இணைந்ததே எமது போராட்டம்

எமது போராட்டமும் இந்தியாவும் பின்னிப்பிணைந்த ஒன்று என மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்கள் அன்றய காலகட்டத்தில் கூறியிருந்தார்.  ஆனால் இந்தியாவின் இராஜதந்திர நிலையினை உலக நாடுகள் தங்களுக்கு ஏற்றாற்போல் பார்க்கின்றன. இரண்டாவதாகதான் எமது பிரச்சனைகளைப் பார்க்கின்றனர்.

அதேபோல் இந்தியாவும் தன்னுடைய நலனுக்காக சில முடிவுகளை மாற்றி வருகின்றது. ஜெனிவாவிலே இந்தியா நடுநிலைமை வகித்தது என்பதற்காக இந்தியாவை நாம் புறக்கணித்து எந்த விதத்திலும் செயற்பட முடியாது.
 
இந்தியாவிலே வருங்காலத்திலே ஆட்சிமாற்றங்கள் வராலாம் அப்போது எமது பிரச்சனைகளை பேசப்படலாம். ஏனெனில் இலங்கையில் நடைபெற்ற போராட்டம் திசை திருப்பப்பட்டது யாரால் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்தியோவோடு பயணித்தால்தால் எமது மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவுடன் சிறந்த உறவை பேணுங்கள்


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுத்தவரையில் இந்தியாவோடு நல்ல உறவை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போதைய நிலையில் எமது இயக்த்தின் மறைந்த தலைவர் ஸ்ரீ அண்ணா இருந்திருந்தால் இந்தியாவோடு பேசியிருப்பார்.
 
எமது இயக்கத்தினை எமது மறைந்த தலைவர் என்றும் ஒன்றுமையுடன் வழிநடாத்திச் சென்றார் அவரின் வழிநடாத்தலில் வந்த நாங்கள் ஒற்றுமையினை இன்றும் பேணிவருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பிரச்சனைகள் வருகின்ற போதிலெல்லாம் எமது கட்சி பல விடுக்கொடுப்புக்களைக் செய்து ஒற்றுமையினைப் பேணி வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக உள்ளது

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதுவரை ஒற்றுமையுடனும் பலத்துடன் செயற்பட்டு வருகின்றது. எனவே நாங்கள் அனைவரும் எமது மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க வேண்டும். என்ற ஒரு நோக்கத்துடன் செயற்பட வேண்டுமாக இருந்தால் வலுவான ஒரு பலத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். வெறும் வார்தைகளால் மக்களின் விடுதலை கிடைக்கப் போவதில்லை. ஆனால ஒற்றுமையின்றிருந்தால்; எம்மையும் எமது மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

 இணைந்த வடகிழக்கு என்பதே எமது எதிர்பார்ப்பு

எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் எமக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். அதற்காக வேண்டித்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் ஆதரித்து வருகின்றார்கள். இணைந்த வட கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தல் இணைந்த வடகிழக்கு என்ற நினைவோடு செயற்பட முடியும்.
 
தற்போதைய காலகட்டத்தில வடக்கு மாத்திரம்தான் பேசப்படுகின்றது கிழக்கு பற்றி கதைக்கப் படுவதே இல்லை என்ற கருத்தும் சிலரிடத்தில் நிலவி வருகின்றன. வடக்கில் அதிக பாதிப்புக்கள் அழிவுகள் அட்டூழியங்கள் அதிகம் நடைபெற்றன. கிழக்கில் எமது முதலமைச்சர் ஒருவர் இருப்பாரேயானால் இவ்வாறான கருத்துக்கள் வந்திருக்கமாட்டாது. கிழக்கில் கடந்த முறை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு ஆசனத்தினை பெற்றிருந்தால் கிழக்கு மாகாண சபையும் எமது ஆட்சிக்குள வந்திருக்கும்.
 
எவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்த வரையில் இணைந்த வடகிழக்கிலேதான் பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறு சிறு தவறுகளை மறந்து போயும் விடக் கூடாது.
எமது மக்களை ஒன்றிணைத்து கொண்டு செல்ல வேண்டும். கிழக்கு, வடக்கு என்ற வேறுபாடுகள் பற்றி கருணா, பிள்ளையான் போன்றோர்களால்தன் பேசப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கைப் பிரித்துப் பார்கின்றது என்ற செய்தியினை கருணா, பிள்ளையான் போன்றோர்கள்தான் சொல்கின்றார்கள்.

மக்களை மதம் மற்றும், பிரதேச வாதம் போன்றவற்றினைக் கூறி மக்களை திசை திருப்பலாம். இவற்றினை அவர்கள்தான் கூறிவருகின்றார்கள் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாற்றான் தாய் என்ற பேதங்ளைக் களைந்து செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. 

தெரிவுக்குழுவும் குப்பைத் தொட்டியும்

எம்மைப் பெறுத்தமட்டில் எமது மக்களுக்கு நிம்தியாக ஒரு வாழ்க்கையினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகின்றோம். இதுவரை காலத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் பலமுறை பேசியிருக்கின்றோம், இதுவரைக்கும் எந்த தீர்வும் கிடைக்கப் பெறவில்லை ஆனால் தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அழைக்கின்றார்கள். ஏற்கனவே பல பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவைகளெல்லாம் ஒரு குப்பைத் தொட்டியிலே போட்ட நிகழ்வுதான்.
 
ஜனாதிபதியினால் உருவாக்கிய கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் பரிந்துரைகளைக்கூட அரசாங்கம் அமுல்படுத்த முடியாதுள்ளது.

அரசிடம் நம்பிக்கையில்லை


எனவே இந்த அரசிடமிருந்து நம்பிக்கையிழந்த நிலையில் நாம் இப்போது உலக நாடுகளிடத்தில் தெரிவித்திருக்கின்றோம். எமது மக்களின் வாழ்வாதாரத்தின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகளே தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளிலே செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எமது மக்களின் வயல் மற்றும் தோட்டக் காணிகளை இராணுவம் சுவீகரித்துக் கொண்டிருக்கின்றது, கால்நடைகளை பிடிக்கின்றார்கள்.
 
இவைகளெல்லாவற்றினையும் வைத்துக் கொண்டு சர்வதேசத்திடம் இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என கேட்டிருந்தோம்.

தற்போது இது ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. சர்வதேச விசாரணை நடைபெறும் இதனல் எமது மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என எதிர்பார்திருக்கின்றோம். இச்சந்தர்ப்பத்தினை நாம் நழுவ விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களுக்காக தொடர்ந்தும் உழைப்போம்


எனவே எமது கட்சி தொடர்ந்து எமது மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எம்மைப் பெறுத்த வரையில் எமது மூச்சு எமது மக்களின் உயிர்நாடி. எப்போதும் நாம் எமது மக்களையும் செயற்பாடுகளையும் மறந்து செயற்பட மாட்டோம் அவ்வாறு செயற்பட்டால் எம்மினம் அனாதைகளாக்கப் ப்பட்டுவிடும். 

எமது மக்;கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மட்டும்தான் நம்பியிருக்கின்றார்கள். ஆகவே எமது கூட்டமைப்பு பலமான, இறுக்கமான, கட்டமைப்புடன் செயற்படும். இவற்றில்தான் எமது கட்சியின் மறைந்த தலைவரின் ஆத்மா சாந்தியும் அமைந்திருக்கின்றது.

வடக்கு கிழக்கில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது

வடக்கு கிழக்கிலே பதிரிகையாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளது அவர்களுக்கு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள், உள்ளன. அடக்கு முறைகள் உள்ளன கருத்துச் சுதந்திரம் மறுக்கப் பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் நினைத்தால் அரசு பக்கம் அவர்களது கருத்துக்களை எழுதி வசதியாக இருக்கலாம். ஏனெனில் இந்த நாட்டிலே சுதந்திரம் என்பது இல்லை சுயமாக கருத்துக்களைச் சொல்ல முடியாதுள்ளது, கருத்துச் சுதந்திரம் இந்த நாட்டிலுலே மறுக்கப்படுகின்றன. இப்படியிருந்தும் தமது கடமைகளை வடகிழக்கிலுள்ள பத்திரிகையாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X