2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் புற்றுநோய் வைத்தியசாலை

Suganthini Ratnam   / 2014 மே 08 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்படுகின்ற புற்றுநோய் வைத்தியசாலையை  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், டாக்டர் எம்.எஸ்.இப்றாலெ;வை தலைமையிலான குழுவினர் புதன்கிழமை (07) பார்வையிட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் 450 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 04 மாடிகளைக் கொண்டதாக  இவ்வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகின்றது.

வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, 80 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்குரிய விடுதி வசதிகள், 10  பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்குரிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய வசதிகள்  இவ்வைத்தியசாலையில் காணப்படும் என எம்.எஸ்.இப்றாலெ;வை தெரிவித்தார்.

இங்குள்ள  புற்றுநோயாளர்கள் மஹரகம, கண்டி போன்ற இடங்களுக்கு சென்று தற்போது  சிகிச்சை பெறுகின்றனர். இவ்வைத்தியசாலை திறக்கப்பட்டால், புற்றுநோயாளர்கள் வெளி இடங்களுக்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும். கிழக்கு மாகாண மக்களுக்கு இது பெரிதும் நன்மை பயக்கும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X