2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

திறமையாக சேவையாற்றிய பொலிஸாருக்கு அன்பளிப்புக்கள்

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தங்களது சேவைகளை திறமையாகச் செய்த  பொலிஸாருக்கு அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

60 பொலிஸாருக்கு 07 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா  பகிர்ந்து வழங்கப்பட்டன.

கடந்த வருடம் கல்லடிப் பாலத்தினுள் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணைக் காப்பாற்றிய ஜெயசிங்க பண்டாரவிற்கு ஒரு இலட்சம் ரூபாவும்  அவருக்கு உதவி புரிந்த ஜெயந்த பண்டாரவிற்கு 50,000 ரூபாவும் கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவினால் வழங்கப்பட்டன.

இதில் கூடுதல் தொகையான  158,000 ரூபாவை வாகரைப் பொலிஸ் நிலையம் பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ண, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்மன, வாழைச்சேனை, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பங்கேற்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X