2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தலசீமியா விழிப்புணர்வு கண்காட்சி

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன் , ரீ.எல்.ஜவ்பர்கான்


உலக தலசீமியா தினத்தையொட்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுசரணையுடன்தலசீமியா நோய் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் இன்று இடம்பெற்றது.  

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி. எஸ். எம். சாள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின பிரதிப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கிறேஸ், சிறுவர் வைத்திய நிபுணர் சித்திரா வாமதேவன், உளநலப் பரிவின் வைத்தியக் கலாநிதி என். கடம்பநாதன், வைத்தியக் கலாநிதி தயாரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட  மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி இன்று சனிக்கிழமை (10) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும்.

கடந்த வாரம் 5 ஆவது தொகுதி மருத்துவ மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள தேசிய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு தலசீமியா நோய் வழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0

  • Chithra Vamadevan Saturday, 10 May 2014 04:11 PM

    தலசீமியா நோயினை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அகற்றும் எமது நோக்கத்துக்கு உறுதுணையாக நீங்கள் அளித்த ஊடக அனுசரணையினைப் பாராட்டுவதுடன் தொடரும் எமது முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம். நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X