2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பு கல்விக் கோட்டம் முதலிடம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்.தேவ அச்சுதன்
 
மட்டக்களப்பு கல்வி வலய மட்ட விளையாட்டு விழா மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிசாம் தலைமையில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது.
இவ் விழாவில் மட்டக்களப்பு கல்விக் கோட்டம் 2318 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிசாம், மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராசா, மண்முனைப் பற்று பிரதேச செயலளார் எஸ்.வாசுதேவன், உட்பட கோட்டக் கல்வி அதிகாரிகள். மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலய விளையாட்டு உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.லவகுமாரின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இந்த வினையாட்டு விழாவில் ஏறாவூர் பற்று கல்விக் கோட்டம் 912 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தினையும், மண்முனைப் பற்று கல்விக் கோட்டம் 399 புள்ளிகளைப் பெற்று மூற்hமிடத்தினையும் பெற்றுக்ககொண்டது.

இதில் ஆண்கள் பிரிவு பாடசாலைகள் மட்டத்தில் முதலாமிடத்தினை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை 425 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், பெண்கள் பிரிவு பாடசாலை மட்டத்தில் 340 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதன் போது பல்வேறு கலாசார நடன நிகழ்வுகளும் உடற் பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X