2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நரசிங்க வைரவர் ஆலய உற்சவ ஆரம்பமும் இறுவெட்டு வெளியீடும்

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு தாழங்குடா மண்முனை, ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவ ஆரம்ப நிகழ்வும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் ஆலய தர்மகர்த்தாவும் பூசகருமாகிய ரமேஸ் தலைமையில் சனிக்கிழமை (10) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் ரி.மதிசுதன், முன்னாள் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சிவலிங்கம், ஆலய தலைவர் கே.தவராசா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன் போது மாகாணசபை உறுப்பினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நரசிங்க வைரவர் மீது பாடப்பட்ட பக்தி ரச பாமாலை இறுவெட்டும் வெளியிடப்பட்டு வருடாந்த உற்சவ பூசைகளும் பாற்குட பவனி நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X