2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புரிந்துணர்வு கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 மே 11 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

அரச சார்பற்ற அமைப்பான வேல்ட் விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்வி மற்றும் செயற்பாடு தொடர்பான புரிந்துணர்வு கலந்துரையாடல் நிகழ்வொன்று மட்டக்களப்பு ஓசானிக் விடுதியில் நேற்று சனிக்கிழமை(10) நடைபெற்றது.

 வேல்ட் விஷன் அமைப்பின் கிழக்கு மாகாணத் திட்ட இயக்குனர் அலக்ஸ் பெஞ்சமின் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வலயக்கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி.மக்டலின் கிழக்கு மாகாணக கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், கிழக்குமாகாண சமூக உளநிலை உதவி முகாமையாளர் எஸ்.கிரிதரன் கிழக்கு மாகாணத்தின் வலயக்கல்வி பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் வேல்ட் விஷன்அமைப்பின் பிராந்திய அபிவிருத்தித் திட்டமிடல் அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள் திட்ட இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வேல்ட் விஷன் அமைப்பின் செயற்றிட்டங்கள் சம்மந்தமாகவும் கல்வி அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் சம்மந்தமாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X