2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அன்னையர் தினம்...

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


சிறுவர்களிடத்தில் தாய்மார்களைக் கௌரவிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்ககோடு அன்னையர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் கல்லடிக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்றன.

சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி மட்டக்களப்;பு தாண்டவன்வெளியில் அமைந்துள்ள முன்பள்ளிக்கு செல்வதற்காக குழந்தைகளை தயார் படுத்தும் விளையாட்டுடன் கூடிய கல்வியை ஊட்டும் பராமரிப்பு நிலையத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறுவர்கள் அன்னையர்களிடம் பரஷ்;பரம்  அன்பை பரிமாறிக் கொண்டதுடன் அன்னையர்களுக்கான பூச்செண்டும் மற்றும் அன்னையைப் பற்றிய வாசகங்கள் பொறித்த வாழ்த்து மடல்களும் ஒவ்வொரு சிறுவர்களினால் தங்களது அன்னைக்கு வழங்கப்பட்டன.

இதன்போது தாய்மாருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான நிர்வாக இயக்குநர் குவேதா மனோகரனால் மாலைகள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X