2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்லடி கடற்கரையில் சிரமதானம்

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகர சபையினால் சுற்றுலா பிரதேசமான மட்டக்களப்பு கல்லடி கடற்கரை இன்று திங்கட்கிழமை (12) சுத்தம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் அவர்களின் ஆலோசனையுடனும் வழிகாட்டலுடனும் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அதன் உத்தியோகஸ்தர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இதன் போது சுனாமி அனர்த்தத்தினால் மண்ணிற்குள் புதையுண்டிருந்த கட்டிட சிதைவுகள் அகற்றப்பட்டதுடன் பிளாஸ்டிக் போத்தல்கள், கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் பற்றைகளும் அகற்றப்பட்டன.

மேலும், அப்பகுதி வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் மேலதிகமாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு கடற்கரை நிலம் குழிகள் இன்றி சீராக்கப்பட்டுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X