2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பல்கலைக்கழக கல்லூரி திறந்துவைப்பு

Super User   / 2014 மே 13 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஜவ்பர்கான

காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரி (மட்டக்களப்பு) இன்று (13) செவ்வாய்க்கிழமை இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால்  திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் இந்த பல்கலைக்கழக கல்லூரியின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் இலங்கையிலுள்ள சவுதி அரேபியா இலங்கைக்கான தூதுவர் அஸ்ஸெய்க் ஸாலி அல் பர்றாஹ், மற்றும் மாலைதீவு நாட்டு அமைச்சர்களான உமர் நசீர் அகமட், அகமட் டெடி அப்துல்லாஹ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெண் கிழக்கு பலக்லைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் உட்பட அரசியல் வாதிகள், முக்கியஸ்த்தர்கள், மற்றும் சவுதி அரேபியா நாட்டு முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இந்த பல்கலைக்கழக கல்லூரியினை திறந்து வைத்த பின்னர் அமைச்சர்கள் பிரமுகர்கள் கல்லூரியினை பார்வையிட்டனர்.
 
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பல்கலைக்கழக கல்லூரிக்கான நிரந்தரக்கட்டிடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் றெதிதென்னையில் நிர்மானிக்கப்படவுள்ளது. அதுவரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதான வீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில்  இயங்குமென்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பல்கலைக்கழக கல்லூரியில் பல் வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X