2025 மே 01, வியாழக்கிழமை

சுற்றாடல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஊர்வலங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலங்கள் மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றன.

மட்டக்களப்பு மாநகரசபையால் அனுஷ்டிக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம், மாமாங்கப் பிள்ளையார் கோவில் சந்தி, புதூர் நூலகம் ஆகிய இடங்களிலிருந்து ஊர்வலங்கள் ஆரம்பமாகி முனை வீதி சிறுவர் பூங்காவைச் சென்றடைந்தன.

இதன்போது, மாநகர சேவைகள் தொடர்பான வீதி நாடகம் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலைய மாணவர்களினால் அப்பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்பாக  நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மாநகரசபையின் உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையப் பணிப்பாளர் கே.பிரேம்குமார், வரியிறுப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

                   



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .