2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து சேதம்

Sudharshini   / 2015 ஜனவரி 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ஜெயஸ்ரீராம்


மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலிச்சோலை பேத்தாழையில் வசிக்கும் செ.ஈவேரா என்பவரது வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, இன்று அதிகாலை (02) ஒரு மணியளவில் இனம் தெரியாதோரால் தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,  முச்சக்கர வண்டிக்கு வைக்கப்பட்ட தீயானது வீட்டின் கூறை மீது பரவியதையடுத்து, அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த குழுவினரால் வீட்டிலிருந்த பெறுமதிமிக்க சில பொருட்களும் தேமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஆதரவு தெரிவிப்பதையடுத்து, பிள்ளையான் குழுவினரால் தமக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையத்தில் செ.ஈவேரா முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.

அத்துடன், ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து பார்வையிட்டதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் வேண்கோள் விடுத்துள்ளார்.  

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X