2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 ஜனவரி 05 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தீர்ப்பு வழங்கப்பட்ட சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு திங்கட்கிழமை (05) காலை பாடசாலை கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது, சுமார் 40 பிள்ளைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கொழும்பு பிறிசன் பலோ என்ற அமைப்பினால் வழங்கப்பட்ட உபகரணங்கள் விநியோகிக்கும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பிரியங்கர தலைமையில், சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிறிசன் பலோ நிறுவன தலைவர் எம்.ஜெயராஜ் பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் கே.மோகனதாஸ், சிறைச்சாலை கைதிகளின் உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் சமூகமளித்திருந்தனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X