2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பல சவால்களுக்கு மத்தியில் ஆர்வத்துடன் வாக்களித்தோருக்கு நன்றி'

Gavitha   / 2015 ஜனவரி 11 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், ஒன்றுபட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அதனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

'பல சவால்களுக்கு மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த பெண்கள் வயோதிபர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விஷேட  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இந்நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டும் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில், முஸ்லிம் சமூகத்தை தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நாட்டில் ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் ஊழல் மோசடிகள், மக்களின் வாழ்க்கை செலவின் அதிகரித்ததன்மை, சட்டம் ஒழுங்கின் முறையான அமுலாக்கமின்மை, குடும்ப ஆதிக்கம், சர்வதிகார ஆட்முறை, இன முரண்பாடு போன்ற நல்லாட்சிக்கு விரோதமான ஆட்சிமுறைமை ஒன்றை, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்தது. இதனை மாற்றியமைத்து எமது தேசத்தில் ஆட்சிமுறைமை மாற்றமொன்றுக்கான ஆட்சிமாற்றம் அவசியப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தது.

இச்செயற்பாட்டில், நாம் பரவலாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் அணியினரோடு இணைந்து செயற்பட்டோம். தற்போது ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். நாம் எதிர்பார்த்த நல்லாட்சி முறைமை அமுலாக்கம் செய்யப்படுவதற்கு,  இதனை ஓர் ஆரம்பப் புள்ளியாக நாம் கருதுகின்றோம். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்றும் போல் சமூக நீதியை உறுதிபடுத்துவதிலும் நல்லாட்சியை உறுதிபடுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் காலங்களில் நல்லாட்சி தத்துவங்களை கொள்கை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஏற்றுக் கொள்கின்ற அரசியல் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும். முஸ்லிம் மக்கள் எமது அழைப்பையேற்று பெருந்திரளாக வாக்களி;ப்பில் கலந்து கொண்டமைக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தமைக்கும் நாம் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மக்களுக்கு விசுவாசமான அரசியல் வேலைத்திட்டத்தில் எம்மோடு இணைந்திருக்கும்படி மக்களை அழைக்கின்றோம். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மனப்பூர்வமாக பிரார்த்திக்கின்றது என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X