2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பஸீரின் தேர்தல் வியூகம் பிழைத்து விட்டது

Sudharshini   / 2015 ஜனவரி 12 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்த முன்னால் அமைச்சர் பஸீர் சேகுதாவூத்தின் தேர்தல் வியூகம் பிழைத்து விட்டது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸீர் சேகுதாவூத் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தனது சுயநலத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலடியில் மண்டியிட வைப்பதுக்கு மேற்கொண்ட அனைத்து தேர்தல் வியூகங்களும் படுதோல்வியடைந்துள்ளதுடன் பஸீர் சேகுதாவூத்தும் தோல்வியடைந்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுத்து, மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைப்பததுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பொரும்பான்மையை பெற்றுக் கொடுத்து அதற்காக கட்சித் தலைமைக்குத் தெரியாமல் அமைச்சுப் பதவியும் பெற்றுக் கொண்டார்.

அதற்கு விசுவாசம் காட்டுவதுக்கும் தனது பொருளாதாரங்களை பாதுகாத்துக் கொள்ளவதுக்கும் முஸ்லிம் சமூகத்தை முழுமையாக அடகுவைப்பதுக்கும் பகிரதப்பிரயத்தனம் செய்தார்.

எவ்வாறாயினும், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முழுமையாக பாதுகாத்து முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்துக்கு ஏற்ப்ப பொது எதிரணி வேட்ப்பாளருக்கு ஆதரவு வழங்க கட்சி தீர்மானித்த போது, அதற்கு எதிராக தனக்கு ஆதரவாக ஓர் அணியை கட்சிக்குள் திரட்டி பல சதிகளையும் மேற்கொண்டு இறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

இவரது அரசியல் வியூகங்கள் அனைத்தும் அவர் நலன் சார்ந்ததாகவே அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகள், அடக்கு முறைகள், படுகொலைகள், சொத்து அழிப்புக்கள், கலாச்சாரத்துக்கு எதிரான பல்வேறு அசம்பாவிதங்களின் போது, அப்போதைய ஜனாதிபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறையிட்டு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு   தனது அமைச்சுப் பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும் வாய் திறக்காமல் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தார்.

அடுத்த சமூகத்தவர்கள் குரல் கொடுத்த போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தனது விசுவாசத்தை ஜனாதிபதிக்கு காட்டி வாக்களித்த முஸ்லிம் சமூகத்தை புறக்கனித்துவிட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரே தலைவர் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் உறுதி மொழி பகிர்ந்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வெளியேறுவதுக்கு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை அதிகமான கூட்டங்களை கூட்டி முடிவெடுக்க முடியாமல் கட்சி தலைமை திக்குமுக்காடியது.

 அதன் பின்னணியில் பஸீர் சேகுதாவூத் இருந்து இறுதிவரைக்கும் தனது விசுவாசத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு காட்டி வந்தார். இறுதியாக போராட்டத்துக்கு மத்தியில் காலம் தாழ்த்தி இறதி நேரத்தில் கட்சி பொரும்பான்மையின் தீர்மானத்துக்கு அமைவாக  வெளியேறிய போதிலும், தனது சுயரூபத்தை வெளிக்காட்டி மீண்டும் தனது விசுவாசத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு காட்டி காதல் கடிதம் எழுதி முஸ்லிம் சமூகத்தை முழுமையாக காட்டிக் கொடுத்துவிட்டு முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவரிடமே பாதுகாப்பு வழங்குமாறு கோரினார்.

அது மாத்திரமல்லாமல் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என இறுதிவரையும் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததோடு, அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும் தனது காலடியில் சரணாகதி அடையும் என கங்கணம் கட்டியிருந்ததோடு தனது தேர்தல் வியூகமும் நிறைவேறப் போவதாக மார் தட்டி கொண்டார்.

அதன் பின்னர் தான் நினைக்கின்ற வகையில் கட்சியையும் தலைமைத்துவத்தையும் வளைத்துப் போட்டு தனது சுயலாபங்களை அடைந்து கொள்ளலாம் என பேராசை கொண்டிருந்ததோடு கட்சியையும் அதன் தலைமையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என திட்டம் தீட்டியிருந்தார.; அதிலும் தற்போது மண்விழுந்து விட்டது எதிர் காலத்தில் இவர்களைப் போன்ற இரட்டை வேடம் போடுகின்ற சுயநலமிக்கவர்களை கட்சிக்குள் நீடித்து நிலைத்து வைப்பது உகந்ததல்ல எதிர் காலத்தில் கட்சி இன்னும் பல்வேறு கூறுகலாக பிளவுபடுவதற்கு இவர்களே காரணியாக அமைவார்கள்.

அத்தோடு கட்சியும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து படிப்படியாக தூரமாக்கப்பட்டு கட்சியும் அழிந்து விடுவதற்கான வாய்பு அதிகரிக்கும்
எனவே , இவ்வாறான சுயநல சிந்தனையுடையவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து உடனே இடைநிறுத்தி இவர்களுக்கு எதிர் காலத்தில் இக்கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்காது கட்சித் தலைமை இப்போது கிடைத்திருக்கும் இவ்வரிய சந்தர்ப்பத்தினை தனக்கு சாதகமாகப் பயண்படுத்தி கட்சியை மறைந்த மாபெரும் தலைவரின் கட்டுக்கோப்பான வழியில்  வழிநடாத்;த முயற்சிக்க வேண்டும்.

அத்தோடு இப்புதிய அரசாங்கத்தில் எதுவித பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் இவர்களுக்கு வழங்காமல் தவிர்த்துக் கொள்வது மிகவும் பொறுத்தமானது எனவும் றமழான் மேலும் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X