2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'நல்லாட்சியை பிரதிபலிக்கும் அமைச்சர்கள் அமைச்சரவையில் வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 13 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நல்லாட்சியை பிரதிபலிக்கக்கூடிய அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இருக்கவேண்டும் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் அரங்கில் திங்கட்கிழமை (12) மாலை  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே  அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் புதிய நம்பிக்கையையும் புதிய ஆரம்பத்தையும்  காட்டுகின்றன. நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்துக்கான முதல் படியாக இந்த ஜனாதிபதித் தேர்தலை எல்லோரும் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பின்படியே  மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். அவர் தெரிவுசெய்யப்பட்டு கடந்த ஓரிரு தினங்களினுள் நடந்துவருகின்ற விடயங்கள் எமக்கு  நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் அர்ப்பணமும் உறுதிப்பாடும் எங்களின் புதிய ஜனாதிபதியிடமும் அவருடன் சேர்ந்துள்ள பொது எதிரணியிடமும் இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். தனது பதவியேற்பை அவர் நடத்திய விதம், அரசாங்க ஊடகங்கள் எவ்வாறு சமநிலையாக நடக்கவேண்டும் என்று கூறிய விதம் மற்றும் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அவர் காட்டும் ஆர்வம் போன்ற விடயங்கள் எமக்கு  நம்பிக்கையை தந்துள்ளன.

இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்து வாக்களித்த அந்த ஆணை வீண் போகாது என்ற நம்பிக்கை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது.

புதிய ஜனாதிபதி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறியிருப்பதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மகிழ்ச்சியுடன் பார்க்கின்றது. இது அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. ஏனென்றால், கடந்தகாலத்தில் போட்டியிட்டு பதவிக்கு வந்த ஒவ்வொருவரும்  தேர்தல் காலங்களில் தாங்கள் கூறிய வாக்குறுதிகளை அப்படியே மறந்துவிட்டு தமது பதவியில் நிரந்தரமாக இருப்பதற்கான  விடயங்களையே செய்துள்ளனர்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X