2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கடன் உதவி

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 13 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி நூர் சனசமூக நிலையத்தினால் ஒருவருக்கு 24,000 ரூபாய் படி 20 பேருக்கு  வட்டி இல்லாத வாழ்வாதாரக்கடன் உதவிகள் திங்கட்கிழமை (12) மாலை வழங்கப்பட்டன.

புதிய காத்தான்குடி நூறானியா சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.றிபாஸ் தலைமையில் நூறானியா பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமட் லெவ்வை, மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றமழான் உட்பட நூர் சனசமூக நிலைய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூதின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வாழ்வதாரக் கடன் உதவிகள் வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X