2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போரதீவுப்பற்றுக்கு குழாய்நீர் விநியோக வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகள் கடந்தகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை  எதிர்நோக்கிய நிலையில், இந்தப் பகுதிகளுக்கு குழாய்நீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில்  இணைப்புகளை கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்திலிருந்து போரதீவுப்பற்றுக்கு குடிநீர் விநியோகத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், பிரதேசங்களுக்கான இணைப்புகளை கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வெல்லாவெளியிலிருந்து மாலையர்கட்டு பிரதேசத்துக்கு  குடிநீர் விநியோகத்துக்கான குழாய்களை பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமையிலிருந்து (13)  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.  

இந்தத் திட்டத்துக்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்படுகின்றது. இதனால், இங்குள்ள  மக்கள்  நீண்டதூரம் சென்று குடிநீரை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இருந்துவந்துள்ள அதேவேளை, சில பகுதிகளுக்கான குடிநீரை போரதீவுப்பற்று பிரதேச சபை வழங்கிவந்தது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X