2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி யுகத்திலும் அபிவிருத்திகள் தொடரும்: ஷிப்லி பாறூக்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சகல அபிவிருத்திப்பணிகளும் ஜனாதிபதி மைத்திரி யுகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஷிப்லி பாறூக்  புதன்கிழமை (14) தெரிவித்தார்.

தற்போது காத்தான்குடி பிரதேசத்திலுள்ள  வீதிகளுக்கு கார்ப்பட்  இடுதலும் ஒழுங்கைகளுக்கு கற்கள் பதிக்கப்படுதலும்  முன்னெடுக்கப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக காத்தான்குடி பிரதான வீதி, சேர் ராஸிக் பரீட் மாவத்தையிலிருந்து  (குட்வின் சந்தி) நீர்த்தாங்கிவரை மீதியாக இருந்த வீதி கார்ப்பட் இடப்படுகின்றன.

மைத்திரி யுகத்தில் சமத்துவம், மத சுதந்திரம், ஊழல் அற்ற நிர்வாகம், மனிதநேயம்,  சகவாழ்வு பேணப்பட்டு சகல அபிவிருத்திப்பணிகளும் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X