2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 15 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரை பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள  மதுரங்குளம், குஞ்சன்குளம் ஆகிய கிராம மக்களுக்கு சுவிஸ் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் அவுஸ்திரேலியா மனிதநேய அன்பர்களின் உதவியுடன் தைப்பொங்கலையொட்டி மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக  நேற்று புதன்கிழமை உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

உதவிப்பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வழங்கிவைத்தார்;.
 
இந்த உணவுப்பொதியில் அரிசி, சீனி, தேயிலை, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கியதுடன்,  205 பேருக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதற்காக, சுவிஸ் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயம் வழங்கிய 68,000 ரூபாய்  மற்றும்;  அவுஸ்திரேலிய மனிதநேய அன்பர்கள் வழங்கிய 80,000 ரூபாய் வழங்கியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X