2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 15 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.சேயோன்

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  வெல்லாவெளி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலனி திக்கோடை கிராமத்திலுள்ள   வீடொன்றை 29.12.2014  அன்று  உடைத்து   கொள்ளையிட்ட   75,000  ரூபாய்  பெறுமதியான  பொருட்களை  நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொலைக்காட்சி, மின்விசிறி, நீர்ப்பம்பி   உள்ளிட்ட பொருட்களையே மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க, சந்தேகத்தின் பேரில்;  மூவர்   கைதுசெய்யப்பட்டு   மட்டக்களப்பு  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,   எதிர்வரும்  22ஆம்  திகதிவரை   விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X